Wednesday, June 11, 2008

காருக்கு கவர் போட்ட கதை

என்னிடம் Hyundai Getz கார் உள்ளது. அதற்கு கவர் போடுவது ஒரு பெரிய வேலையாக உள்ளது. என்னென்றால், தனியாக போட முடியாதென்று இது நாள் வரை நினைத்திருந்தேன். எப்போதுமே யாரவது கவர் போடுவதற்கு உதவியிருக்கிறார்கள். ஒரே ஒரு முறை மட்டும், நானே கவர் போட்டேன்; அப்போது நன்றாக காற்று அடித்துகொண்டிருந்தது. காற்றின் பக்கமாக கவரை தூக்க கவர் parachute போல பறக்க, அப்படியே காரின் மேல் சார்த்திவிட்டேன்.

இன்று, உதவுவதற்கு எவருமில்லை; காற்று கூட அமைதியாகவே இருந்தது. பல முயற்சி செய்தும் ஒரு பலனும் இல்லை. எனக்கே காமெடியாக இருந்தது. கவரை போடுவதும், அது விலகி கிழே விழுவதுமாக இருந்தது. யாரவது பார்த்திருந்தால் என்னை ஒரு கிறுக்கன் என்றே நினைத்திருப்பார்கள்.

நான் செய்த தவறு கடைசியாகத்தான் எனக்கு புரிந்தது. நான் கவரை காரின் முன் பக்கத்திலிருந்து போட முயற்சித்தேன். முன் பக்கம் தாழ்வாக இருப்பதால் கவரானது வழுக்கி விலகியது. சரி, ஒரு முறை பின்பக்கத்திலிருந்து முயற்சிப்போம் என்று போட்டு பார்க்க; அட இவ்வளவு எளிதாக கச்சிதமாக பொருந்துமா என்று ஆச்சரியப்பட்டேன்.

இக்கதையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது காருக்கு கவர் போடும் போது பின் பக்கத்திலிருந்து தொடாங்க வேண்டும். முன் பக்கத்திலிருந்து தொடங்க வேண்டுமானால் யாராவது துணைக்கு வேண்டும்.